இந்திய விழாவில் கலந்து கொண்ட கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியை வெளியேற்றம்


இந்தியாவின் நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த பேராசிரியை ஜீவா நிரியல்லா பேசிய போது, எதிர்ப்பு கிளம்பியதையடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஈழத்தில் நடந்த போரின்போதும், பின்னரும் தமிழ்ப் பெண்கள் எவருக்கும் கொடுமைகள் இழைக்கப்படவில்லை என்று பேசியதை அடுத்தே அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை ஜீவா நிரியல்லா கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது இலங்கையில் பெண்களுக்கு எதிராக எந்தவிதமான குற்றச் செயல்களும் நடைபெறவில்லை. தமிழ்ப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக கூறப்படுவதும் சரியல்ல என்று பேசியுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாம் தமிழர் இயக்கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிங்களப் பேராசிரியையே வெளியேறு என்ற கோஷத்துடன் கூட்ட அரங்குக்குள் புகுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஜீவா நிரியல்லா அங்கிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now