
"இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அவர்களது அண்மைய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்களில் தடுமாறியிருந்தன. ஆனால் அவுஸ்ரேலியாவில் வைத்து இலங்கை அணி எதிர்பார்க்காத விதமாக மிகச்சிறப்பாகச் செயற்பட்டிருந்தது. ஆகவே போர்மின் அடிப்படையில் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன" என வக்கார் யுனிஸ் குறிப்பிட்டார். எனினும் காலநிலைகள், ஆடுகள நிலைவரங்கள் ஆகியன பங்களாதேஷிற்கும் அவுஸ்ரேலியாவிற்குமிடையில் வித்தியாசப்படுகின்றன என்பதால் எந்த அணி குறித்த நாளில் சிறப்பாக ஆடுகின்றதோ, அந்த அணி வெற்றிபெறும் எனத் தெரிவித்த வக்கார் யுனிஸ், இம்மூன்று அணிகளும் மிகச்சிறந்த ஆசிய அணிகள் என்பதால் களநிலவரங்கள், ஆடுகளப் போக்குகளை இவ்வணிகள் நிச்சயமாக அறிந்திருக்கும் எனத் தெரிவித்தார்.
அத்தோடு போட்டிகளை நடத்தும் பங்களாதேஷ் அணியையும் ஒட்டுமொத்தமாக தவறவிட முடியாது எனத் தெரிவிக்க வக்கார் யுனிஸ், அவ்வணியால் கிண்ணத்தை வெல்லமுடியாது போனாலும் போட்டிகளில் அதிர்ச்சி வெற்றிகளை ஏற்படுத்த முடியும் எனவும், அதன் காரணமாக பங்களாதேஷ் அணி மீதும் கவனம் காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.