ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் சேவைகளை தான் பயன்படுத்தவுள்ளதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.
'புதியதாக நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை ஆழகடல் துறைமுகத்தை பங்களாதேஷ் பயன்படுத்திக்கொள்வதற்கு இலங்கை வாய்ப்பளிக்க முன்வந்துள்ளது. இது எமக்கு உதவியாக அமையும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துபவர்கள் கொழும்பிற்குள் செல்லத் தேவையில்லை. இது நேரத்தை மீதப்படுத்தும்' என பங்களாதேஷ் நிதியமைச்சர் ஏ.எம்.ஏ.முத்தையா கூறினார்.

இலங்கை பங்களாதேஷ் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவின் மாநாடு டாக்காவில் கடந்த 8 ஆம் திகதி நிறைவடைந்தது.
சுமார் இரு தசாப்தங்களின்பின்னர் இலங்கை - பங்களாதேஷ் கூட்டு பொருளாதார
ஆணைக்குழு மீளாய்வு இடம்பெற்றதாகவும் இருதரப்பு வர்த்தகத்தை
வினைதிறனாக்குவதற்கு இது வழிவகுத்ததாகவும் இலங்கைத் தூதுக்குழுவுக்கு
தலைமை தாங்கிய அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.