பாலச்சந்திரன் எல்.ரி.ரி.ஈ. காவலர்களால் சுடப்பட்டிருக்கலாம்: தயா மாஸ்டர்

  2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளை திரிபுபடுத்தப்பட்டு சர்வதேச ரீதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி கூறியுள்ளார்.

சனல் 4 அலைவரிசையினால் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவுகளானவை எல்.ரி.ரி.ஈ.யினால் வெளியிடப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட ஒளிப்பதிவுகள் என ஐ.ரி.என். தொலைக்காட்சியில் தயா மாஸ்டர் கூறினார்.

எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாரகனின் 12  வயதான மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 அலைவரிசையின் புதிய வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவது குறித்து  தயா மாஸ்டர் கூறுகையில்,  எல்.ரி.ரி.ஈ. காவலர்களின் கடும் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும் அவர் தப்பியோட முயற்சித்தபோது எல்.ரி.ரி.ஈ. காவலர்களால் சுடப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now