

அந்த அமைப்பின் உத்தியோகப்பூர்வ பத்திரிகையில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை இந்தியா எதிர்க்க வேண்டுமெனவும் இதில் இந்தியா தயக்கம் காட்டினாலோ நடுநிலை வகித்தாலோ அதில் இந்தியா சிக்கலான நிலைக்கு தள்ளிவிடும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேற்கத்தேய நாடுகள் தங்களுக்குத் தொடர்பில்லாத பிரச்சினைகளில் அநாவசிய தலையீடுகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு எதிராக உத்தரவு பிறபிக்க அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் உரிமை இல்லை என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.