மூன்று
பேர் கொண்ட குடும்பமொன்று 7500 ரூபாவுடன் வாழ்க்கை நடத்த முடியும் என்பதை
நிரூபிப்பதற்காக பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என கல்வி அமைச்சர்
பந்துல குணவர்தன அழைப்பு விடுத்ததனையடுத்து தான் அவருடன் இந்த விடயம்
தொடர்பில் விவாதிக்கத் தயார் என மக்கள்
விடுதலை முன்னணியன் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி
தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று (29) விடுத்திருந்த ஊடக
அறிக்கையிலேயே குறித்த சவாலை ஏற்று விவாதிக்கத் தயார் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் தானும்
விவாதிக்கத் தயார் என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் தெரிவித்துள்ளமை
அறிந்ததே.