நேற்றைய
தினம் ஐ.நா சபையில் அமெரிக்காவின் இலங்கைக் கெதிரான தீர்மானம்
வெற்றிபெற்று வாக்கெடுப்பில் இலங்கை தோற்றது இன மத பேதமின்றி அனைத்து
இலங்கை மக்களுக்கும் ஒரு கசப்பான சம்பவமே. சென்றவாரம் மடவளையில் ஜும்மாவின்
பின்னரும் இலங்கைக் கெதிரான தீர்மானத்தில் இலங்கை வெற்றிபெற ஜமாஅத்தினரால்
துவாக்களும் கேட்கப்பட்டது பலரும் அறிந்த்ததே.
இன மத பேதங்கள் இருந்தாலும் நாடு என்று வரும்போது அனைவரும் இலங்கையர் என்றே இதுவரை காலமும் எமது சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இதே வேளை நேற்று ( 22 மார்ச்) ஐ.நா சபையில் அமெரிக்காவின் இலங்கைக்
கெதிரான தீர்மானம் வெற்றிபெற்ற போது முஸ்லிம்கள் செறிவாக வாழும் மடவளையின்
தெல்தேனிய சந்தி சுற்றுப்பாதை ( ROUND ABOUT) இல் (சுமார் மாலை 7
மணியளவில்) ஒருவர் வெடிகளை கொளுத்திவிட்டு ஓடியுள்ளார்
.
.
அதாவது இலங்கை ஐ.நாவில் தோல்வியடைந்ததற்கு முஸ்லிம்கள் சந்தோசத்தில் வெடி கொளுத்துகிறார்கள் என்று காட்டப் பார்த்திருக்கிறார்.
ஆனால் அல்லாஹ் பெரியவன் அந்த இடத்தில் இருந்து முச்சக்கர வண்டி ஓட்டும்
அந்நிய சகோதரர்களுக்கு உண்மை தெரியும்.அதே வேளை இவ்வாறான விஷக்கிருமிகள்
இருப்பதும் அவர்களுக்கு தெரியும்.
சிட்டியா என்றழைக்கப்படும் அந்நிய சகோதரரான இவர்
தெல்தேனிய வீதியில் மடவளையின் எல்லையில் வாழும் ஒருவர்தான்.ஏற்கனவே சில
தினங்களுக்கு முன் இலங்கை - பாக்கிஸ்தான் போட்டியில் பாக்கிஸ்தான் வென்ற
போது இதே போல் செய்துவிட்டு ஓடிவிட்டார்.
அப்போது பொறுமை காத்த எமது ஊர் சகோதரர்கள் இம்முறை அவரை விரட்டிச்சென்று
பிடித்து தர்ம அடி கொடுத்தார்கள் . அதை அந்நிய சகோதரர்களும் பாராட்டியது
குறிப்பிடத்தக்கது.
பிறகு வந்த வத்துகாமம் போலீஸ் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்தது தவறு
என்றும் சம்பந்தப்பட்டவரை போலீசில் ஒப்படைத்திருக்க வேண்டும் என்றும் அவரை
அடித்தவர்களை சிலவேளை கைது செய்வோம் என்றும் பொதுமக்களிடம்
சொல்லியிருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் இது ஒரு பெரிய விடயமாக இருக்காது என சில தரப்புகள் எமக்கு அறியத்தந்தன.