ஈழத்தமிழர்கள் இலங்கை அரசு அரசு நடத்திய போர்க்குற்றங்கள் குறித்து
அமெரிக்கா இலங்கை அரசு மீது போர்க்குற்றம் செய்ததாக ஒரு தீர்மானத்தை கொண்டு
வந்து ஐநா சபையில் உள்ள அனைத்து நாடுகளின் ஆமோதிப்பை கேட்டது.
இதற்கு பல்வேறு நாடுகளும் இலங்கை அரசு போர்க்குற்றம் செய்திருக்கிறது என்று தங்களுடைய ஆமோதிப்பை தெரிவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்திய அரசு அமெரிக்கா கொடுத்திருக்கிற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சியினரின் குரல்களும் பாராளுமன்றத்தில் எம்.பிக்களின் மூலமாக வழியுறுத் தப்பட்டிருக்கின்றன.
ஆனால், ஆளும் மன்மோகன்சிங் அரசு அவர்களின் குரல்களுக்கு செவிசாய்க்காமல் இருப்பதால் இந்தியா, இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் என்ற செய்திகள் கசிந்துகொண்டிருந்தன.
இதைக்கேட்டு கோபமடைந்த கோவை பெரியா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் திரண்ட தோழர்கள், காந்திரபுரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு சோனியாகாந்தியின் உருவபடத்தை செருப்பால் அடித்தும், தீயிலிட்டும் கொளுத்தினார்கள்.
திடீரென்று நடந்த இந்த சம்பவத்தால் பதட்டத்துக்குள்ளான கோவை மாநகர பொலிஸார், அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டபோது, ‘’இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தால், தமிழகத்திற்கு வரும் காங்கிரஸாருக்கு தொடர்ந்து கருப்புக்கொடி காட்டி போராட்டம் செய்வோம்’’ என்று தெரிவித்தார் கு.ராமகிருஷ்ணன்.