
சமீபத்தில்
சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் நடந்த சுவிஸ் ஓபன் பாட்மின்டன் தொடர்
நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் செய்னா நேவல் சாம்பியன்
பட்டம் வென்றார்.
இதுகுறித்து
செய்னா கூறியது: சுவிஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி
அளிக்கிறது. இதற்கு இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சினின் 100வது
சதம் முக்கிய காரணம்.
ஏனெனில்
எனது அரையிறுதிப் போட்டியின் போது, வங்கதேசத்துக்கு எதிராக சச்சின் தனது
100வது சர்வதேச சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். இது என்னுள்
சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என தூண்டியது. அதற்கேற்ப போட்டியில்
முழுத்திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டம் வென்றேன். இது உற்சாகமாக
உள்ளது.
சர்வதேச
கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவனாக திகழும் சச்சினை கடவுளாக கருதுகின்றனர்.
இவர் அனைத்து விளையாட்டு நட்சத்திரங்களுக்கும் ரோல் மாடலாக விளங்குகிறார்.
பல்வேறு
சாதனைகள் படைத்து வரும் இவருக்கு விரைவில் நாட்டின் உயரிய விருதான பாரத
ரத்னா விருது கிடைக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.