இலங்கையில் முதன் முறையாக அதிவேக பெருநகர வேக ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரை இந்த பெருநகர வேக ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
மலேசியாவை மையமாகக் கொண்ட விமான எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் கம்பெனி லிமிடெட் நிறுவனம் இத்திட்டத்திற்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
இதற்காக முதலீட்டாளர்கள் மலேசியா, அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து வருவார்கள் என விமான எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் கம்பெனி லிமிடெட் நிறுவன தலைவர் பரிமலன் ராஜோ இசா மைக்கல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வேலைத் திட்டம் நிறைவடைந்தால் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்புக்கு நாளாந்தம் 18 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் ஊடாக சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2016ம் ஆண்டில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.