பாலச்சந்திரன் படுகொலையும் முஸ்லீம்களின் நிலைப்பாடும்.

எமது குறிப்பு : - எமது மின்னஞ்சல் முகவரிக்கு லங்கா நவ் வாசகரால் எழுதப்பட்ட ஆக்கம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆக்கத்தை எவ்வித மாற்றமும் இன்றி நாம் பதிவிடுகின்றோம்
ஆக்கம்  - சுவைர் மீரான்.
(Jaffna)

அண்மையில் சனல் 4  அலைவரிசை வெளியிட்ட ஆவணத்தினைத் தொடர்ந்து பல்வேறு பட்ட கருத்துக்கள்
வெளிப்படுத்தப் பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய ஒரு விடயம் குறித்து தமிழ் பேசும் முஸ்லீம்களின் நிலைப்பாடு என்ன
என்பதனை நோக்குவோம்.
 1 ) பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொலையை முஸ்லீம்கள் அங்கீகரித்துக் கொண்டாடுகின்றார்களா?
2 ) முஸ்லீம்களாகிய நீங்கள் சிறுவனின் கொலையை நியாயப் படுத்துவது இஸ்லாத்துக்கு முரணானது இல்லையா?
இந்நாட்களில் தமிழ் நண்பர்களால் முக நூல் பக்கங்களில் முஸ்லிம்களை நோக்கி
அதிகமாக கேட்கப்படும் கேள்விகளின் சுருக்கமே மேலே உள்ள இரண்டு கேள்விகளும்.

இவற்றிற்கான சுருக்கமான பதில்....................

நண்பர்களே, முஸ்லீம்களாகிய நாம் சொல்லும் கருத்தை நீங்கள் தெளிவாக புரியத் தவறி விட்டீர்கள்.
எந்த குழந்தை கொல்லப்படுவதையும் நாம் ஆதரிக்கவோ அனுமதிக்கவோ இல்லை,
இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகள் கொல்லப்படுவது அனுமதிக்கப் பட முடியாதது.

நாம் கேட்பதெல்லாம், பிரபாகரனால் ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகளும், தாயின் வயிற்றில் இருந்த சிசுக்களும்
வெட்டி வெளியே எடுத்தும் கொல்லப் பட்டது பற்றி எதுவுமே பேசாத தமிழ் மற்றும் சர்வதேச ஊடகங்களும்
அமேரிக்கா உள்ளிட்ட ஐக்கிய நாடுகளும், சனல் 4 உம் பாலச்சந்திரன் என்ற 12 வயது பால்ய இளைஞனின் மரணம் குறித்து, அவன் மட்டும்தான்
உலகத்திலேயே கொல்லப்பட்ட ஒரே ஒரு சிறுவன் என்பது போல
இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கூக்குரலிடுவது ஏன் என்பதைத்தான்??

பாலச்சந்திரனைத் தவிர வேறு எந்த பால்ய இளைஞர்களோ சிறுவர்களோ, குழந்தைகளோ, தாய்
வயிற்றில் இருந்த சிசுக்களோ கொள்ளப்படவே இல்லை என்பது போலல்லவா இருக்கின்றது
உங்களின் நடவடிக்கைகள்.

[இங்கே பாலஸ்தீன்,ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான், கஷ்மீர், ஆபிரிக்க நாடுகள் பற்றியெல்லாம்
எழுதினால் மிக நீண்டு விடும், அவ்வளவு கொடுமைகள், அனைத்துக்கும் பின்னணி அமெரிக்காவும் நேட்டோவும்.]
எல்லா குழந்தைகளின் கொலைகளும் ஒரே தரத்தில் வைத்துப் பார்க்கப் பட்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

பாலச்சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட காரணம், அவன் ஒரு சிறுவன் என்பதனால் அல்ல,
மாறாக அவன் பிரபாகரனின் மகன் என்பதனாலாகும். இதைத்தான் நாம் எதிர்க்கின்றோம்.
ஏனெனில் பிரபாகரன் மிகக் கொடூரமான கொலை வெறியன். தன இனத்தார் உட்பட இலங்கையின் அனைத்து இனத்தாரையும்
கொன்று ஒழித்தவன்.

ஒரு மேலதிகத் தகவல்:
கொல்லப்படும் பொழுது பாலச்சந்திரனின் வயது 12.
ஆனால் புலிகள் இயக்கத்தில் 10 , 11 , 12 வயது சிறுவர் சிறுமியர் எல்லாம் போராளிகளாக இருந்தார்களே?
வீரம் பொருந்தியவராக நீங்கள் இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் உங்கள் தலைவர் யாரோ
ஏழைகள் பெற்ற 10 , 11 , 12 வயதுச் சிறுவர் சிறுமிகளுக்கெல்லாம் பயிற்ச்சி அளித்து, ஆயுதம் கொடுத்து, சயனைட் அணிவித்து 
சிங்களவனையும், முஸ்லீமையும், ஏன் தமிழனையும் கூட கொன்று தொலை என்று அனுப்பும் பொழுது,
தான் பெற்ற மகனுக்கு மட்டும் பயிற்சியோ, ஆயுதமோ கொடுத்திருக்க மாட்டார் என
ஏற்றுக் கொள்ள முடியுமா? புலிக்குப் பிறந்ததை பூனையாக
பிரபாகரன் தான் விட்டிருப்பாரா?
ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிரபாகரனாலேயே கொல்லப்பட்ட நிலையில்,
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், பிரபாகரனின் மகனுக்காக மாத்திரம் கவலைப் படுவதையும்,
முக்கியத்துவம் கொடுப்பதையும் ஒருபோதும் ஏற்றக் கொள்ள முடியாது.

மிக முக்கியமாக::::
தமிழர்களையோ, தமிழர்களின் உணர்வுகளையோ புண்படுத்துவது எமது நோக்கமல்ல,
அவற்றை நாமும் மதிக்கின்றோம். தமிழர்கள், சிங்களவர், முஸ்லீம்கள் அனைவருமே இலங்கைத் திரு நாட்டின்
பிரஜைகள், இவர்கள் அனைவரும் நட்போடு வாழ வேண்டியவர்கள்.
முஸ்லீம்களின் எதிரிகள் புலிகள் மட்டுமே, தமிழர்கள் அல்ல.
தமிழர்கள் நமது நண்பர்கள்

 _______________________________________________________________________________________________________________________________-
வாசகரால் எமக்கு அனுப்பட்ட மின்னஞ்சல் பதிவு  

கீழே உள்ள கட்டுரை எனது சொந்த ஆக்கம்.
தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் வீணான தப்பபிப்பிராயங்கள் ஏற்படுவதை
தவிர்க்கும் நோக்குடன் நிதர்சனமாக எழுதப் பட்டது.

இது உங்கள் பிரசுரத்துக்காக அனுப்பப்படுகின்றது.

- சுவைர் மீரான்.
(Jaffna)
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now