
வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க.
தூதுக்குழுவினர் த.தே.கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளுடன்
கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமது கட்சி அநேகமாக இவ்வருட மே தினக்கூட்டத்தை ஐ.தே.கவுடன்
இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்தக்கூடும் என சுரேஷ் பிரேமச்சந்திரன்
தெரிவித்தார்.
"மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் கட்சி, சிறிதுங்க ஜயசூரிய
தலைமையிலான ஐக்கிய சோசலிசக் கட்சி போன்றவை தற்போது ஐ.தே.கவுடன் இணைந்து
செயற்படுகின்றன. நாமும் எம்முடன் தொடர்பான விடயங்களில் ஐ.தே.க.வுடன்
இணைந்து செயற்படுவோம்" என அவர் கூறினார்.
இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக அரசாங்கம்
செயற்படுவது அவசியம் எனவும் யுத்தம் முடிந்து 3 வருடங்களான போதிலும்
அரசாங்கம் வடக்கிலுள்ள அம்மக்களுக்கு எதையும் வழங்கவில்லை எனவும் ஐ.தேக.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறினார்.
த.தே.கூட்டமைப்புடன் மனித உரிமைகள் விவகாரம், அரசியல் தீர்வு உட்பட பல
விடயங்கள் குறித்து ஐ.தேக. கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீரவு யோசனைகளை ஐ.தே.க. முன்வைக்குமா என கேட்டபோது அதை தமது கட்சி பின்னர் செய்யும் என்றார்.