இலங்கை
பிரச்சினை தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடி தீர்வொன்றை
பெற்றுக்கொள்ளவுள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி
தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளதாக சன் செய்திவெளியிட்டுள்ளது.
இலங்கை பிரச்சினையை இந்திய மத்திய அரசு அறிந்துள்ளமையினால், அனைத்துக்
கட்சிகளுடனும் கலந்தாலோசித்து விரைவில் உரிய தீர்வு காணப்படும் என சோனியா
காந்தி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணைக்கு ஆதரவளிக்கக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதுவார் எனவும் சோனியா காந்தி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை அறிந்துள்ளமையால் அவற்றுக்கு உரிய தீர்வு காண மத்திய அரசு அனைத்து கட்சிகளுடனும் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என தான் நம்புவதாகவும் இந்திய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.