ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திற்கு முன்பாக இலங்கையர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்துள்ள அநாவசிய அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலி, சுவிஸர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் பல
நாடுகளில் வாழும் இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து
கொண்டிருந்ததாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குழுவின் பிரதிநிதி மஹிர
புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை முறியடிக்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐரோப்பி நாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் ஒன்று திரண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
இலங்கை பெற்றுக்கொண்டுள்ள சுதந்திரத்தை பிறந்திருக்கும் மற்றும் பிறக்கவிருக்கும் எதிர்கால சந்ததியினர் அனுபவிக்கவுள்ள இந்த தருணத்தில், எமது நாட்டிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் தாம் கேட்டுக்கொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குழுவின் பிரதிநிதி மஹிர புஞ்சிஹேவா தெரிவித்தார்.