
அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்களாக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவிற்குச் செல்லும் புகழிடக் கோரிக்கையாளர்களை அங்கீகரிக்கும் விதம் அவுஸ்திரேலியாவில் 60 வீதமாகக் காணப்படுவதாகவும், பிரித்தானியாவில் இந்த நிலைமை 20 தொடக்கம் 30 வீதமாக காணப்படுவதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.
அவுஸ்திரேலிய புகழிடக் கோரிக்கையாளர்களின் இடைத்தங்கல் முகாம்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக, 2009 தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், புகழிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், தற்போது அந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதேவேளை உண்மையான அகதிகளுக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலிய ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது.