கஹவத்தை
இரட்டைக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்ட இருவருக்கும் தான் அடைக்கலம் கொடுத்ததாக வெளியான செய்திகளில்
உண்மை இல்லை என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரட்டைக்கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர்கள் இன்று கொலை இடம்பெற்ற இடத்திற்கு
அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது, பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சந்தேக நபர்களுக்கு எதிராக
பாரிய எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில்
மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, இவர்கள் இருவரும் சம்பவ
இடத்திற்கு பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
அஜித் ரோகன தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் புதல்வி ஆகியோரின் வீட்டிற்கும், சந்தேக
நபரான ராஜூவின் வீட்டிற்கும் இரகசிய பொலிசாரால் அவர்கள் அழைத்துச்
செல்லப்பட்டனர்.