3 ஆண்டுகளுக்கு பிறகு பிரபாகரன் உயிர் துறந்த இடத்துக்கு பொதுமக்கள் செல்ல இலங்கை அரசு அனுமதி அளித்திருப்பதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ந்தேதி இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில்
விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடந்தது.
நந்திகடல் பகுதியில் நடந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தார். அதை தொடர்ந்து இலங்கையில் 30
ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.
இருந்தும் பிரபாகரன் உயிர் துறந்த இடத்துக்கு பொதுமக்கள் செல்ல இலங்கை அரசு தடை விதித்து இருந்தது.
தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.