மகளிர்
தினத்தன்று இடம்பெற்ற போட்டி ஒன்றில் பங்கு கொண்ட வெலிக்கடை
சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரால் பாலியல்
துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் இன்று (16) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு இடம்பெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றின்
ஒத்திகையில் பங்கு கொள்ள வேண்டும் என்று எனக்கூறி பெண் சிறைக்கைதிகள்
சிலரைத் தெரிவு செய்து அவர்களைத் தனிமைப்படுத்தி பாலியல் தொந்தரவுக்கு
உட்படுத்தியமை குறித்த தகவல்கள் வெளியானதையடுத்தே, இது குறித்து ஆராய்ந்து
அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அதன் அறிக்கையே
இன்று அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.
