அணிக்காக
சிறப்பான பங்களிப்பை வழங்க முடியுமாக உள்ளவரை சர்வதேசப் போட்டிகளில்
தொடர்ந்தும் விளையாட வேண்டும் என தான் எண்ணுவதாக இந்திய அணியின்
நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். தனது
நூறாவது சர்வதேசப் போட்டிச் சதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் இன்று
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே சச்சின் டெண்டுல்கர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.மனரீதியாக சிறப்பாக உள்ள போது, அணிக்கு ஒரு பெறுமதியைச் சேர்க்கிறேன் என உணரும் வரை இந்தியாவுக்காகத் தொடர்ந்தும் போட்டிகளில் பங்குபற்றத் தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், சிறப்பான ஃபோர்ம் இல் இருக்கும் போது ஓய்வுபெறுதல் என்பது சுயநலமான எண்ணம் எனத் தெரிவித்தார். சிறப்பான ஃபோர்ம் இல் இருக்கும் போது அணிக்காகவும், நாட்டுக்காகவும் சேவையை வழங்க வேண்டும் எனவும் சச்சின் தெரிவித்துள்ளார்.
எப்போது போட்டிகளில் பங்குபற்ற முடியாது என்ற மனநிலை ஏற்படுகிறதோ, அப்போது ஓய்வுபெற விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர், மற்றவர்கள் தெரிவிப்பதற்காக ஓய்வுபெற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒருவருடகாலப் பகுதி கடினமான காலப்பகுதியாக அமைந்ததாகத் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், 100ஆவது சதத்தைப் பெற வேண்டுமென ஊடகங்கள் வழங்கிய அழுத்தம் தன் மீது தாக்கத்தைச் செலுத்தியதாகத் தெரிவித்தார். சில தருணங்களில் தான் ஓரளவு சிறப்பாக ஆடியதாகவும், எனினும் சதத்தைப் பெறமுடியாது போனதாகவும் சச்சின் தெரிவித்தார்

