
எரிவாயு விலை விரைவில் மீளாய்வு செய்யப்படும். தீர்மானம் எடுத்த பின் நாம் இதுபற்றி அறிவிப்போம். புதிய விலை பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்ட பின் வர்த்தமானியூடாக அறிவிக்கப்படும் என மர்சூக் தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலைகள் கடந்த மாதம் அதிகரிக்கப்பட்ட பின் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என கூறியிருந்தார்.
இருப்பினும் பிரதான எரிவாயு கம்பனியான லாஃப், லிற்றோ நிறுவனங்கள், 12.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை முறையே ரூபா 209 மற்றும் 175ஆல் அதிகரிக்க அனுமதி கோரியுள்ளன. தற்போது ஒரு எரிவாயு சிலிண்டரின் விலை 2046 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.