ஒட்டுசுட்டான் மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச செயலகங்களில் இந்தப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் நேரடியாக விசாரணைகளை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனினும் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுடன் தொடர்புடைய எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை பதிவாகவில்லை என வன்னி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ். சுதாகரன் சுட்டிக்காட்டினார்.