பீதியாக்கும் வீதி விபத்துக்கள் கடந்த 03 மாதங்களில் 578 பேர் பலி

இவ்வருடம் மார்ச் 28 ஆம் திகதிவரையான 3 மாத காலப்பகுதியில் நாடுமுழுவதும் வீதி விபத்துக்களால் 578 பேர் உயிரிழந்ததுடன் 1270 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் நேற்று தெரிவித்தது.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை காலை 6.00 மணிமுதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிவரையான 24 மணித்தியாலங்களில் வீதி விபத்துகளால் 11 பேர் பலியானதுடன் 23 பேர் காயமடைந்தனர்.

கடுவெலயில் நடைபெற்ற விபத்தொன்றில் இருவர் பலியானதுடன் 7 பேர் காயமடைந்தனர். ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் ஒன்றுடன் கார் ஒன்று மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
கேகாலையில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் மோதியதால் இருவர் பலியானதுடன் 6 பேர் காயமடைந்தனர்.

குருநாகல் நாரம்மலவில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் 24 வயதான இளைஞர் ஒருவர் பலியானார்.
நுவரெலியா – பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்தனர்.
அம்பலங்கொடையில் வான் ஒன்றும் - ட்ரக் ஒன்றும் மோதிக்கொண்டதால் ஒருவர் பலியானார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now