
ஐ.பி.எல்
கிரிக்கெட் தொடங்கப்பட்டது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
அணித்தலைவராக டோனி செயல்பட்டு வருகிறார். அணியை சிறப்பாக வழி நடத்தி கடந்த
2010, 2011 ஆகிய 2 ஆண்டுகளாக தொடர்ந்து ஐ.பி.எல் கோப்பையை பெற்று
தந்துள்ளார்.
அதிரடியாக ஆடும் வழக்கம் கொண்ட டோனி, அணியின் நிலைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றி கொள்வார்.
இந்நிலையில்
ஐந்தாவது ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ்
அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
தொடக்க
வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்த நிலையில் டோனி களமிறங்கி பொறுப்பாக ஆடினார்.
இருப்பினும் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் நேற்றைய
போட்டியில் டோனி 12 ஓட்டங்கள் எடுத்த போதே ஐ.பி.எல் தொடரில் 1,500
ஓட்டங்களை கடந்த 7வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஐபிஎல் தொடர்களில் இதுவரை 64 போட்டிகளில் பங்கேற்றுள்ள டோனி 1,514 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 8 அரைசதங்கள் அடித்துள்ளார்.
எனினும்,
நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியிடம் 7
விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.