
வடகொரியா
நடத்திய ஏவுகணைப் பரிசோதனை தோல்வியடைந்தாலும் நாட்டின் செலவுகளில்
ராணுவச் செலவுக்கு முதலிடம் அளிக்கப்படும் என்று அந்த நாட்டின் தலைவர்
உறுதியாகத் தெரிவித்தார்.
இந்தநிலையில்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை
தோல்வியடைந்ததைப் பார்க்கும் போது, இந்த நாடு பசித்துக் கிடக்கும் தன்
மக்களைப் பற்றி அக்கறைப்படாமல் நாட்டின் நிதியை ஏவுகணை தயாரிப்பதில்
வீணாக்குவதாகத் தோன்றுகிறது என்று விமர்சித்துள்ளார்.