இந்தோனேஷியா சுமத்ரா தீவுகளில் இன்றும் நிலநடுக்கம்.



இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகள் பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக அது பதிவாகி உள்ளது.

கடந்த புதன்கிழமையன்று அசே மாகாணப் பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அது ரிக்டர் அளவுகோலில் 8.7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

புதன்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவின் கொல்கத்தா முதல் சென்னை வரையிலான கிழக்குக் கடலோர நகரங்களும் அதிர்ந்தன. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று மும்பை, குஜராத்தின் கட்சி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீர் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து தெற்காசிய பிராந்தியத்தில் பரவலாக நிலநடுக்கம் உணரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதுவரை உயிர்ச்சேதங்களோ பொருட்சேதங்களோ ஏற்படவில்லை என்பதுதான் ஆறுதலான செய்தி.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now