தூத்துக்குடி கொழும்பு இடையே ஏப்ரல் 19ம் திகதி முதல் மீண்டும் பயணிகள்
கப்பல் இயக்கப்படும் என துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அதன் தலைவர் சுப்பையா கூறியதாவது:
தூத்துக்குடி துறைமுகம் இந்தாண்டு 281 லட்சம் தொன் சரக்குகள் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 13 ம் திகதி தூத்துக்குடி கொழும்பு இடையே பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. அது கடந்த நவம்பர் மாதம் 18ம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.
இதற்கு தொழில்நுட்ப கோளாறு மற்றும் எரிபொருள் காரணம் ஆகும். தற்போது இதனை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதிமுதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 450 பேர் பயணிக்க முடியும். வாரம் இருமுறை (செவ்வாய், வியாழன்)ஆகிய கிழமைகளில் இயக்கப்பட உள்ளது என்றார்.