ஃபேஸ்புக்,டுவிட்டர் இணையதளங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க் துபாய் அரசு உத்தரவு.

Dubai government checked the facebook and Twitter in 24 hours.
துபாயில் 24 மணிநேரமும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துகளை லட்சக்கணக்கான மக்கள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் வழியாக பரிமாறிக் கொள்கின்றனர். இதனால், எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் புரட்சி வெடித்தது. சீனாவிலும் இதுபோன்ற விமர்சனங்கள் இணையதளங்கில் பரவலாக வெளியானதால், பல வெப்சைட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதளங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் துபாய் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து துபாய் சைபர் கிரைம் துணை இயக்குனர் சலீம் ஒபய்த் சல்மீன் நேற்று கூறுகையில், சமூக இணையதளங்களில் குற்றங்களை தடுக்க 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now