உலகின்
100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவுசெய்யும் 'டைம்' இதழின் தற்போதைய
கணக்கெடுப்புக்காக முதல்வர் நரேந்திர மோடி மோசடி செய்துள்ளார் என்று
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா
குற்றம்சாட்டியுள்ளார்.
அகமதபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைக் கூறிய அவர், குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளதாகவும், அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
'ஆம்' பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உலகில் எந்த தலைவரும் மோடியைப் போன்று செய்ததில்லை. இதெல்லாம் டைம் இதழின் பட்டியலில் தாம் வரவேண்டும் என்ற சாதாரண காரணத்துக்காகத்தான் என மோத்வாடியா குற்றம்சாட்டினார்.
டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்பில் மோடிக்கு தற்போது 96,741 வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த பட்டியலில் அவர் 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் Redditcom பொது மேலாளர் எரிக் மார்ட்டின் 1,23,840 வாக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.