பாகிஸ்தானிய 737 விமான விபத்துக்குக் காரணம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்? (காணொளி இணைப்பு)

பாகிஸ்தானில் போஜா எயார் போயிங் 737 என்ற விமானம் கடந்த வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகியது.

இதற்கான காரணம் சீரற்ற காலநிலையெனவும், கடும் காற்று, இடி மற்றும் மின்னல் காரணமாக விமானத்தில் எரிபொருள் தாங்கி வெடித்தமையே என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.


எனினும் ரஷ்ய ஊடகமொன்று விமானம் விபத்துக்குள்ளாகியமைக்கான காரணம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் ( (Unidentified flying object அல்லது UFO) என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 


விமானி விமானத்தை செலுத்திக்கொண்டிருக்கும் போது அவரின் கண்களின் முன் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருளொன்று தோன்றியதாகவும் அதன் ஒளி முக்கோணவடிவில் காணப்பட்டதாகவும் இதனால் அவர் குழப்பம் அடைந்தமையே விபத்துக்கான காரணமெனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இது தொடர்பான காணொளியும் தற்போது யுடியூப் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.



இச்செய்தியானது ஊர்ஜிதப்படுத்தப்படாதபோதிலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் ( (Unidentified flying object அல்லது UFO), வேற்றுக்கிரக வாசிகள் பூமியின் எல்லைக்குள் நுழைதல் தொடர்பில் செய்திகள் வெளிவருவது வழமை. 


பின்னர் இவை நிரூபிக்கப்படாமல் வெறும் வதந்தியாக மாற்றமடைவதும் வழமை. சிலர் ஊடகங்களில் பிரபலம் பெறுவதற்கும் இத்தகைய செய்திகளை வெளியிடுகின்றனர்.


கடந்த வருடமும் இதேபோன்ற செய்தியொன்று வெளியாகியது.

அதாவது வேற்றுக்கிரக ஜீவராசி ஒன்றினது எனக் கருதப்படும் சடலமொன்று தென் சைபீரியாவின் இர்கட்ஸ்க் பகுதியில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மலையேறுபவர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு காணொளியும் இணையத்தில் வெளியாகியது.

அமெரிக்கா, கனடா, ரஷ்ய ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக பறக்கும் தட்டுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதேவேளை அதிகமாக வானில் பறக்கும் தட்டுப் போன்று தென்படுகின்ற பொருட்கள் வானிலை ஆய்விற்காக செலுத்தப்படும் பலூன்கள், செயற்கைக்கோள்கள் எனவும் மிக உயரத்தில் இருக்கின்ற இவற்றின் மீது ஒளி படும்போது, பறக்கும் தட்டு போன்று தோன்றுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now