சித்திரைப்
புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் விசேட
பஸ் சேவையை நடைமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை
எடுத்துள்ளது.
இதற்காக சுமார் 750 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் பண்டிகைக்கால விசேட பஸ்களை அடையாளம் காணும் பொருட்டு மும்மொழிகளிலும் அச்சிடப்பட்ட புதிய ஸ்டிகர் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ரோஷான் குணவர்தன குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த பஸ்கள், சாதாரண, அறைசொகுசு அல்லது சொகுசு பஸ்களா என
அடையாளம் காண்பதற்கு மற்றுமொரு ஸ்டிகரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக
அவர் மேலும் குறிப்பிட்டார்.