மும்பை
இன்டியன்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக இந்திய அணியின்
நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார். தனது
அணித்தலைமையை அவர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இற்கு
வழங்கியுள்ளார்.
தனது முடிவு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர் "மும்பை இன்டியன்ஸ் ஓர் அணி என்பதைத் தாண்டியது. மும்பை இன்டியன்ஸ் எனக்கு ஒரு குடும்பம் போன்றது. இந்தத் தருணத்தில் அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து நீங்க வேண்டுமெனக் கருதினேன். நீண்ட யோசனைக்குப் பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளேன். கலந்துரையாடல்களின் பின்னர் அணித்தலைமைப் பொறுப்பை ஹர்பஜன் சிங்கிற்கு வழங்கியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
தனது முடிவிற்காக மும்பை இன்டியன்ஸ் அணியின் உரிமையாளர்களான நீற்றா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோருடன் கலந்துரையாடியதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். தனது முடிவு தொடர்பாக அவர்களிடம் கலந்துரையாடியபோது அவர்கள் வழங்கிய ஆதரவைக் கண்டு அகம் மகிழ்ந்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
அணித்தலைமைப் பொறுப்புக் கிடைத்தமை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஹர்பஜன் சிங், அணித்தலைமைப் பொறுப்பைத் துறப்பது குறித்தும், அப்பதவியை தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்தார். மும்பை இன்டியன்ஸ் அணியை வழிநடத்துவது பெருமைக்குரியது எனத் தெரிவித்த அவர், தன் திறமைகள் குறித்து நம்பிக்கை கொண்டமைக்காக சச்சின் டெண்டுல்கருக்கும், உரிமையாளர் நீற்றா அம்பானிக்கும் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.
மும்பை இன்டியன்ஸ் அணி - ஐ.பி.எல். போட்டிகளில் முதலாவது போட்டியாக இடம்பெறவுள்ள போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் நாளை மறுதினம் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.