தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க.
பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 9ம் திகதி சென்னை
உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவின் மீதான விசாரணை வருகிற 9ம் திகதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் கிருபாகரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கில் வைகோ 9ம் திகதி ஆஜராகி வாதாடுகிறார்.