அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும்
வீழ்ச்சியடையவதை தடுக்க கடந்தவாரம் இலங்கை முயற்சிகளை எடுத்த போதும், அது
பாரிய வெற்றியை அளிக்கவில்லை.
கடந்தமாதம் அமெரிக்க டொலர் ஒன்று 111 ரூபா என இருந்த இலங்கை ரூபாவின் பெறுமதி இந்தமாதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
உச்சஅளவாக, இது கடந்த 19ம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக 131.60 ரூபா என்ற நிலையை எட்டியது.
இந்தநிலையில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியை 125 ரூபாவாக நிலைநிறுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதையடுத்து கடந்த வாரத் தொடக்கத்தில் தளம்பலான நிலையே காணப்பட்டது.
டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி கடந்த வியாழக்கிழமை 127.60 ரூபாவாக உயரந்தது.
ஆனால் நேற்று மாலை வர்த்தகம் முடிந்தபோது இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் சரிந்து, டொலருக்கு எதிரான மதிப்பு 128.30 ரூபா என்ற நிலையை அடைந்தது.
இந்தநிலையில் எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் இலங்கையின் பணவீக்கம் 5.5 வீதமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.