ஐ.பி.எல்.
போட்டிகளை அடுத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வொன்றை எடுக்கவுள்ளதாக
பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். மே
27ஆம் திகதி ஐ.பி.எல். போட்டிகள் நிறைவடையவுள்ள நிலையில் 15 முதல் 20
நாட்கள் வரை அதன் பின்னர் ஓய்வொன்றை எடுக்க விரும்புவதாக அவர்
தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துப் பிராந்திய அணிகள் ஷகிப் அல் ஹசனை இப்பருவகாலத்திற்கு ஒப்பந்தம் செய்ய விரும்பும் நிலையில், அந்த ஒப்பந்தம் தொடர்பான இறுதி முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக ஷகிப் அல் ஹசன் தெரிவித்தார்.
ஐ.பி.எல். போட்டிகள் நிறைவடைந்த பின்னர் உடனடியாக இங்கிலாந்துக்கு வருமாறு அழைக்கப்பட்டால் இங்கிலாந்துப் பிராந்தியப் போட்டிகளில் பங்குபற்றப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர், 15-20 நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
கடந்த மூன்று வருடங்களாக ஓய்வின்றி தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்குபற்றி வருவதாகத் தெரிவித்த ஷகிப் அல் ஹசன், இவ்வாறான நிலையில் துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டையும் தொடர்ச்சியாக சிறப்பாகக் கொண்டு செல்வது கடினமானது எனவும், இரண்டிலும் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்துவது கடினமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
பங்களாதேஷ் அணியின் எதிர்காலம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஷகிப் அல் ஹசன், தற்போதைய நிலையில் டெஸ்ட் போட்டிகளை வெற்றிகொள்ள முடியுமான நிலை காணப்படுகிறதா என்பது சந்தேகம் எனத் தெரிவித்த அவர், 20 விக்கெட்டுக்களைக் கைப்பற்றக்கூடிய பந்துவீச்சு வரிசை தங்களிடம் இல்லை எனத் தெரிவித்தார்.
எனினும் ஆசியக்கிண்ணப் போட்டிகளில் வெளிப்படுத்தியபடி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்களாதேஷ் அணி போட்டித்தன்மையான அணியாகக் காணப்படும் எனவும் தெரிவித்தார். இந்தியா போன்ற பெரிய அணிகளே வெளிநாடுகளில் போட்டிகளில் பங்குபற்றும் போது தடுமாறும் நிலையில், பங்களாதேஷ் அணி முதலில் பங்களாதேஷில் வைத்து போட்டிகளைத் தொடர்ச்சியாக வெல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்