சர்வதேச டுவென்டி- 20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இதில்
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில்
கெவின் பீட்டர்சன்(இங்கிலாந்து), மார்டின் கப்டில்(நியூசிலாந்து), இயான்
மார்கன்(இங்கிலாந்து) ஆகியோர் உள்ளனர். இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா
ஏழாவது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான
தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சுவான்(இங்கிலாந்து), அஜந்தா
மெண்டிஸ்(இலங்கை), சயீத் அஜ்மல்(பாகிஸ்தான்) ஆகியோர் உள்ளனர்.
ஆல்-ரவுண்டர்களுக்கான
தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் வாட்சன்(அவுஸ்திரேலியா),
அப்ரிதி(பாகிஸ்தான்), டேவிட் ஹசி(அவுஸ்திரேலியா) ஆகியோர் உள்ளனர்.
இந்தியாவின் யுவராஜ் சிங் 9வது இடத்தை இலங்கையின் மாத்யூவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அணிகளுக்கான
தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இங்கிலாந்து, தென்
ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் உள்ளன. இந்திய அணிக்கு 7வது இடம் கிடைத்துள்ளது.