
காலியில் அமைக்கப்பட்டுள்ள டின்மீன் தொழிற்சாலையில் ஏப்ரல் 3 ஆம் திகதி உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது தினசரி 10,000 டின்களாக உள்ள இதன் உற்பத்தி படிப்படியாக 20,000 ஆக அதிகரிக்கப்படும் என அவர் கூறினார்.
பேலியகொடையிலும் புத்தளம் மாவட்டத்தின் முந்தலமவிலும் உள்ள மேலும் இரு தொழிற்சாலைகளிலும் இவ்வருடம் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்மூன்று தொழிற்சாலைகள் மூலமும் தினமும் குறைந்தபட்சம் 60,000 டின்மீன்களை தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இலங்கைக்கு தினமும் 100,000-120,000 டின்மீன்கள் தேவைப்படுகின்றன. தற்போது சீனா, தாய்லாந்து, சிலி ஆகிய நாடுகளிலிருந்து இவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்காக வருடாந்தம் 520 கோடி ரூபா செலவிடப்படுகிறது.