பாரிய கடத்தல் சம்வங்களினால் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும்!-ரணில் எச்சரிக்கை!


Post image for பாரிய கடத்தல் சம்வங்களினால் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும்!-ரணில் எச்சரிக்கை! நாட்டில் இடம்பெறும் பாரிய கடத்தல் சம்பவங்களினால் அபகீர்த்தி ஏற்படும் என எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடத்தல்கள் சம்பவங்களினால் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நாட்டின் நன்மதிப்பு பாரியளவில் வீழ்ச்சியடையும்.
 கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்வங்களினால் நாட்டின் சட்டம் ஒழுங்கு  சீர்குலைந்துள்ளது. மக்கள் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மக்கள் போராட்ட அமைப்பின் தலைவர் பிரேம்குமார் மற்றும் உறுப்பினரான திமுது ஆட்டிகல ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்வில் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now