
மேலும் உலகின் முன்னிலை வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
34
வயதான குமார் சங்கக்கார கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் 2,267
ஓட்டங்களைக் குவித்தார். அவர் உலகத் தரம் வாய்ந்த விக்கெட் காப்பாளராகவும்
விளங்குகின்றமை குறிப்பிடத்கத்கது.
கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகையானது 1864 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில்
கடந்த 1889ம் ஆண்டு முதல் அச்சஞ்சிகையின் ஆசிரியரினால் வருடாவருடம் 5
சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர்.
2004ம்
ஆண்டிலிருந்து உலகின் முன்னிலை வீரருக்கான விருதும் வழங்கப்படுகிறது.
இவ்விரு விருதுகளையும் ஒரே தடவையில் வென்ற முதலாவது வீரர் என்ற பெருமையை
குமார் சங்கக்கார பெற்றுள்ளார்.