சரியாகப்
பயன்படுத்தினால், அது நமக்குப் பொருளாதார நண்பன்! தவறாகப்
பயன்படுத்தினால்… அதைப்போல மோசமான ‘ஸ்லோ பாய்சன்’ எதுவும் இல்லை. கிரெடிட்
கார்டின் சரியான பயன்பாட்டை அறிந்து வைத்துக் கொள்வது, அதை
பாய்சனாக்கா மல், பாயசமாக் கும் கலையை உங்கள் வசமாக்கும்!
கிரெடிட் கார்டு எதற்கு?
கிரெடிட்
கார்டு என்பது, வங்கிகள் மற்றும் கிரெடிட் யூனியன்கள் வழங்கும் கடன்
அட்டை. கையில் பணம் இல்லாதபோது நேரும் எதிர் பாராத செலவுகளை சமாளிக்க இது
கைகொடுக்கும். பிறகு, அத்தொகையை செலுத்திவிடலாம் என்பதுதான் நடைமுறை.
உதார ணத்துக்கு… ஒவ்வொரு மாதமும் 30-ம் தேதி ‘பில்லிங் தேதி’
என்றால், ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வாங்கும் பொருளுக்கு மே மாதம் 15 தேதி
பணம் செலுத்தினால் போதுமானது. அதற்கான பணத்தை முன்கூட்டியே உங்களுடைய வங்கி
சேமிப்புக் கணக்கில் போட்டு வைத் திருந்து, சரியான தேதியில்
செலுத்திவிடலாம். இந்த இடைப்பட்ட நாளில் நமது வங்கிக் கணக்கில் இருந்த
பணத்துக்கு வட்டி (ஆண்டுக்கு 4 முதல் 6 சதவிகிதம் வரை) கிடைக்கும்.
இது
மட்டுமல்ல… நமது இன்ஷூரன்ஸ் பிரீமியம், மொபைல் பில், மின் கட்டணம்,
வங்கிக் கடன்கள் உள்ளிட்டவற்றுடன் கிரெடிட் கார்டை இணை த்து விட்டால்,
எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் நமது பொறுப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுக்
கொண்டிருக் கும். சமயங்களில், கிரெடிட் கார்டுகளை பிரபலப்படுத்துவ தற்காக,
கிரெடிட் கார்டு பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளில் குறிப்பிட்ட
சதவிகிதப் பணத்தை சம்பந் தப்பட்ட வங்கிகள் நமக்கே திருப்பிக்
கொடுப்பார்கள்.
கிரெடிட் கார்டு எப்போது எமனாகும்..?
அதாவது, பில் தொகையில் 5
சதவிகித்தை கட்டச் சொல்வார்கள். ’50,000 பில் தொகை என்றால், 2,500 ரூபாய்
கட்டினால் போதும், கார்டை தொடர்ந்து பயன்படுத்த லாம்’ என்று வங்கி தரப்பில்
சொல்வார்கள். நீங்களும் ‘இது ஓ.கே-தானே..?!’ என்று மகிழ்ச்சியோடு 2,500
கட்டிவிடுகிறீர்கள். அடுத்து என்ன நடக்கும்?
மீதமுள்ள
47,500 ரூபாய்க்கு மாதத்துக்கு 3 சதவிகித வட்டி (வருடத்துக்கு 36%)
விதிக்கப்படும். அடுத்த மாதத்தில் நமது அசல் 48,925 ஆக மாறி இருக்கும்.
மீண்டும், மீண்டும் குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே செலுத்துகிறீர்கள் என்று
வைத்துக்கொண்டால், அது சிந்துபாத் கதைதான். கடன் எப்போது முடியும் என்று
வங்கிக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. வட்டி மட்டுமல்லாமல்… லேட்
பேமன்ட் அபராதமும் சேர்ந்து கொள்ளும்.
உங்கள்
கார்டு லிமிட் 50,000 ரூபாய் என்றால், அதற்கு மேல் செலவு செய்ய முடியாது
என்று நினைக்கலாம். ஆனால், 50,000 ரூபாய்க்கு மேலேயும் செலவு செய்யலாம்.
இதற்கு ஒவர் லிமிட் சார்ஜ் என்று மாதத்துக்கு 3 சதவிகிதம் வட்டி
விதிக்கப்படும்.
நீங்கள் எப்படி?!
கிரெடிட் கார்டு சில அறிவுறுத்தல்கள்!
கிரெடிட் கார்டை பயன்படுத்துவது தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார், நிதி ஆலோசகர் பத்மநாபன்.

கிரெடிட்
கார்டு வைத்திருந்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்கும் என்று சொல்லி,
அதற்குப் பிரீமியம் வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது. அதைத்
தவிர்த்துவிடுங்கள். கார்டு புரொடக்ஷன் கட்டணம் என்று கட்ட ணம் வாங்கவும்
வாய்ப்பிருக்கிறது. கார்டு வாங்கும்போது எவ்விதமான கட்டணங்களும் இல்லை என்று உறுதி செய்த பிறகே வாங்குங்கள்.
செலவு
செய்த தொகையை பணமாகச் செலுத்தினால்… ஒரு நாளைக்கு முன்பு
செலுத்திவிடுங்கள், செக் என்றால் நான்கு வேலை நாட்களுக்கு முன்பு
செலுத்திவிடுங்கள், இன்டர்நெட் பேங்கிங் மூலமாக டிரான் ஸ்ஃபர் செய்வதாக
இருந்தால், 2 நாட்களுக்கு முன்பு செய்துவிடுங்கள். இல்லை யெனில், அபராதம்
செலுத்த வேண்டி இருக்கும்.
கார்டைப்
பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். இரண்டு முறை பில் செய்ய
வாய்ப்பிருக்கிறது. கார்டை தேய்த்த பிறகு கொடுக்கப்படும் ஸ்லிப்பை கவனமாக
செக் செய்து கையெழுத்துப் போடவும். 100 ரூபாய்க்கு 1,000 ரூபாய் என்று
மாற்ற நிறைய நேரம் ஆகாது. முடிந்த வரை கூடவே இருந்து கார்டை வாங்கி வரவும்.
ஸ்கிம்மர் மெஷினில் உங்கள் கிரெடிட் கார்டைச் செலுத்தி, டூப்ளிகேட் கார்டு
தயாரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஒவ்வொரு
முறையும் கிரெடிட் கார்டு உபயோகத்துக்குப் பின்னர் நீங்கள் என்ன செலவு
செய்தீர்கள், எவ்வளவு செய்தீர்கள், எங்கு செய்தீர்கள் என்ற எஸ்.எம்.எஸ்.
வரும். ஒரு வேளை வராவிட்டால்… கஸ்டமர் கேர் செக்ஷனுக்கு போன் செய்து
விசாரியுங்கள். மொபைல் நம்பரை மாற்றினால், தவறாமல் நிறுவனத்துக்குத் தகவல்
சொல்லுங்கள்.