ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரமளவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் அமெரிக்க குழுவில் மூன்று பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தக உறவை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்க பிரதிநிதிகள் இலங்கை வருவதாக ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் ஜெனிவாவில் இலங்கை குறித்து அமெரிக்கா முன்வைத்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் அதுகுறித்து ஆராய இக்குழு இலங்கை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.