ஐ.சி.சி
டெஸ்ட் அணிக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் நம்பர் 1 மற்றும்
இந்தியாவின் நம்பர் 3 இடங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச
கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) சார்பில் வெளியிடப்படும் சிறந்த டெஸ்ட்
அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 111 புள்ளிகளுடன் மூன்றாவது
இடத்தில் உள்ளது.
முதலிரண்டு
இடங்களில் இங்கிலாந்து(118), தென் ஆப்ரிக்கா(116) அணிகள் உள்ளன. சில தசம
புள்ளிகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா(111) நான்காவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து,
அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த இந்திய
அணியின் மூன்றாவது இடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா,
மேற்கிந்திய தீவுகள் அணிகள் மூன்று போட்டிகள்(ஏப்ரல் 7ம் திகதி முதல் 27ம்
திகதி வரை) கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளன.
இதில்
அவுஸ்திரேலிய அணி தொடரை முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் 113 புள்ளிகள்
பெறும். இதன்மூலம் இந்திய அணி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டு,
அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறும்.
அவுஸ்திரேலியா
2-0 என வென்றால் கூட இந்திய அணியின் மூன்றாவது இடத்துக்கு ஆபத்து
ஏற்படும். அவுஸ்திரேலியா 2-1 அல்லது 1-0 என தொடரை கைப்பற்றினால் மட்டுமே,
இந்திய அணியின் மூன்றாவது இடத்துக்கு சிக்கல் வராது.
அதேவேளையில்
இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை
முழுமையாக இழக்கும் பட்சத்தில் 113 புள்ளிகளுடன் முதலிடம் பறிபோகும்.
அப்போது
சில தசம புள்ளிகள் வித்தியாசத்தில், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்துக்கு
முன்னேறும், இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். தென்
ஆப்ரிக்கா முதலிடம் பிடிக்கும்.
இங்கிலாந்து
அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள ஏப்ரல் மாதம் 3ம் திகதி கொழும்புவில்
தொடங்கவுள்ள இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற
வேண்டும்.