
அதிக இரத்த அழுத்தம் காரணமாக பெரும்பாலானவர்கள் நாளாந்தம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வாரத்திற்கு ஒருமுறை பொதுமக்கள் தமது இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளவென முதல் கட்டமாக கொழும்பில் இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளது.
இன்றைய தினம் சுகாதார அமைச்சின் வளாகம், தேசிய கண் வைத்தியசாலை வளாகம், கொழும்பு கோட்டை இலங்கை வங்கி வளாகம் ஆகியவற்றில் இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன.
மேலும் பொரளை பகுதி வைத்தியசாலைக்கு அருகிலும் இந்த இரத்த அழுத்த கணிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.