புகைத்தல் பழக்கம் புற்று நோயை உண்டு பண்ணும் என்று சிகரெட் பெட்டியில்
எழுதி இருந்தும், அதை வாசித்தபடியே புகைக்கிறது இன்றைய இளம் சமுதாயம்.
காரணம், அதற்கு அடிமையானதும், அதனை நாகரீகம் என்று நினைக்கும் ஆரோக்கியமற்ற மனோநிலையும் தான்.
டெர்ரி, தற்பொழுதி 51 வயதாகும் அமெரிக்க பெண். தனது இளம் வயதில்
புகைத்தலுக்கு அடிமையான இவரை பற்றிக் கொண்டது தொண்டை புற்றுநோய். அந்
நோய்க்காக அளிக்கப்பட்ட வீரியமான சிகிச்சைகளால் பல்லு, தலைமுடி கொட்டி அகோர
தோற்றத்தை பெற்றதோடு, தொண்டையில் சிகிச்சைக்காக இடப்பட்ட பெரிய குழியுடன்
தனது இறுதி நாட்களை எண்ணிக்கொன்டிருக்கிறார்.
நீங்கள் புகைப்பவரா? இனியாவது விட்டுவிடுங்களேன்…!




