ராஜஸ்தான்
றொயல்ஸ் அணியின் தற்போதைய அணித்தலைவர் ராகுல் டிராவிடை, முன்னாள்
அணித்தலைவர் ஷேன் வார்னோடு ஒப்பிடுவது நியாயமற்றது என்று அவுஸ்திரேலிய
முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில்
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 31
ஓட்டங்கள் வித்தியாசத்தில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் அணி தோற்றது.
இதன்பிறகு
கில்கிறிஸ்ட் கூறியது: தனது ஆட்டத்திறன் மற்றும் திட்டமிடுதலால் மற்ற
வீரர்களிடம் இருந்து வேறுபட்டவர் வார்ன், துடுப்பாட்ட வீரர்களை சமாளிக்கும்
அற்புதமான ஆற்றல் பெற்றவர். அவரையும், டிராவிடையும் ஒப்பிடுவது
தேவையற்றது. டிராவிட் மிகச்சிறந்த வீரர். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால்
மதிக்கப்படுபவர்.
அவரது
கேப்டன்ஷிப் மூலமாக ராஜஸ்தான் அணி பலனடையும். இந்த ஐ.பி.எல் போட்டியில்
விளையாடும் சிறந்த அணிகளில் ராஜஸ்தானும் ஒன்று. அவர்கள் வெற்றியுடன்
தொடங்கியுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாட இந்த வெற்றி
அவர்களுக்கு உதவும் என்றார்.
ராஜஸ்தானுக்கு
எதிராக தோற்றது குறித்துப் பேசிய அவர், மைதானத்திற்கு ஏற்றவாறு
பந்துவீச்சாளர்கள் பந்துவீச தவறிவிட்டனர். தோல்வி என்பது எல்லோருக்கும்
ஏமாற்றமளிப்பதாகவே அமையும். அதிலும் முதல் ஆட்டத்தில் என்றால் சொல்லவே
வேண்டாம்.
இருப்பினும் இந்தத் தோல்வியை உடனடியாக மறந்துவிட்டு சிறப்பாக ஆட முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.