இலங்கைக்கு உச்சம் கொடுக்கும் சூரியன்- பட்டியல் விபரங்களுடன்


இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை சூரியன் இலங்கைக்கு மிகவும் அண்மித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 


இதற்கமைய இன்று நண்பகல் 12.14யிற்கு கன்தேகொட, மித்தெனிய மற்றும் வீரவில ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுத்துள்ளது.

சூரியன் பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவில் நிலைகொண்டுள்ளது. எட்டு வினாடிகளில் சூரியனின் ஔிக்கீற்றுகள் பூமியை வந்தடைகின்றன.


சூரியன் உச்சம் பெறுவது பற்றி விளக்கமளிக்கிறார், வளிமண்டலவியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜயசேகர,  புவி சூரியனை சுற்றி வருகின்ற பாதை நீள்வட்ட பாதையாகும். இந்த சுற்று பாதையில் 23 பாகை சரிவில் பூமி சூரியனை சுற்றி வருகின்றது பூமி சூரியனைச் சுற்றி வரும் போது சூரியன் உச்சம் கொடுக்கும் காலப்பகுதி வேறுபடுகிறது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதியன்று சூரியன் பூமிக்கு உச்சம் கொடுக்க ஆரம்பித்தது. பின்னர் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து சூரியன் இலங்கைக்கு உச்சம் கொடுக்கின்றது. இது வட திசையை நோக்கி நகர்வடைகிறது. பின்னர் மீண்டும் மறுபக்கம் நகர்வடையும் அதன்போது மீண்டும் செப்டம்பர் மாதத்தில் சூரியன்  இலங்கைக்கு உச்சம் கொடுக்கும்.


நாளை நண்பகல் 10.13யிற்கு, வக்கடுவ,  பெல்மதுளை மற்றும் ஓகந்த ஆகிய பிரதேசங்களுக்கும், எதிர்வரும் 7 ஆம் திகதி நண்பகல் 12.13யிற்கு,  யட்டியந்தோட்டை, ராகமை, கொத்மலை, கரவனெல்ல, கோமாரி ஆகிய பிரதேசங்களிலும்,  ஏப்ரல் 8 ஆம் திகதி நண்பகல் 12.12யிற்கு கலகெதர, அக்குரண, காரைத்தீவு, கடுனேரிய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
 

இலங்கைக்கு உச்சம் கொடுக்கும் சூரியன்

திகதி நேரம் பிரதேசங்கள்
2012.04.09 பி.ப 12.12 சம்பூர், நிக்கவரெட்டிய, பாலமீன்பாடு
2012.04.10 பி.ப 12.12 மரதன்கடவல, ஒட்டுமடு, மஹஇலுப்பல்லம
2012.04.11 பி.ப 12.12 சம்பூர், மஹவிலச்சிய, பளுகதுறை
2012.04.12 பி.ப 12.12 திரியாய், ஓமந்தை, மடு
2012.04.13 பி.ப 12.11 முள்ளியவளை, அம்பகாமம்
2012.04.14 பி.ப 12.11 வீரமலை, உடையார்துறை
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now