டெஸ்ட்
கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழக்கும் நிலையில் இங்கிலாந்து அணி
உள்ளதால் அந்த அணியின் தலைவர் ஆன்ட்ரூ ஸ்டிராஸுக்கு கடும் நெருக்கடி
ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டில் இந்திய அணியை வென்று டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது இங்கிலாந்து.
இப்போது
இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தால், முதலிடத்தை தென்
ஆப்ரிக்காவிடம் இழந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையிடம் இங்கிலாந்து தோல்வியடைந்துள்ளது.
கொழும்புவில்
இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்தால்,
இங்கிலாந்து முதலிடத்தை இழப்பது உறுதி. இதனிடையே அணித்தலைவர் ஸ்டிராஸை
மாற்ற வேண்டும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.