ஈடன்
கார்டன் மைதானம் குறித்து கடந்த ஆண்டு டோனி கூறிய கருத்துக்கு கொல்கத்தா
நைட் ரைடர்ஸ் அணியின் ரியான் டென் டஸ்சேட் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த
ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின்
அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம்
டி20 போட்டிகளுக்கு ஏற்றதல்ல என்று கூறியிருந்தார்.
டோனியின்
கருத்து குறித்து, ஈடன் கார்டன் மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகளுக்காக
பயிற்சியில் ஈடுபட்டிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பன்முக
ஆட்டக்காரர் ரியான் டென் டஸ்சேட்டிடம் கேட்கபட்டது.
இதுகுறித்து
டஸ்சேட் கூறுகையில், ஈடன் கார்டன் குறித்து டோனி எப்படி அவ்வாறு கூறலாம்,
உண்மையில் சென்னை மைதானம் தான் மிகவும் மந்தமாக செயற்படக்கூடியது என்றார்.
மேலும்
அவர் கூறுகையில், இம்முறை கொல்கத்தா அணியில் புதிய திறமையான வீரர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே உறுதியாக இறுதிபோட்டி வரை செல்வோம் என்று
கூறினார்.
நெதர்லாந்து
நாட்டு வீரரான டஸ்சேட் மேலும் கூறுகையில், டி20 உலக கிண்ண போட்டியில்
நெதர்லாந்து அணி இடம் பெறாததது வருத்தமளிக்கிறது என்றார்.