
சீனாவின்
வர்த்தக நகரமான, ஷாங்காயில் நாளுக்கு நாள் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாது, இந்த நகரில், சர்வதேச குற்றங்களும்
பெருகி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஆங்கில
மொழி அறிவு தேவைப்படுகிறது. இதற்காக, நூற்றுக்கும் அதிகமான உயர் போலீஸ்
அதிகாரிகளுக்கு, ஒன்பது மாதங்களுக்கு வார இறுதி நாட்களில், "வால் ஸ்டீரிட்
இங்கிலிஷ்' நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
கடந்த,
2009ல், 30 போலீஸ் அதிகாரிகள் ஆங்கில பேச்சு திறன் பயிற்சி பெற்றுள்ளனர்.
தற்போது பயிற்சி பெற உள்ள போலீஸ் அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில்
அடிப்படை ஆங்கிலம் பயின்றுள்ளதாகவும், தற்போதைய பயிற்சியால் ஆங்கில
பேசுவது எளிதாகும், என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.