தம்புள்ளை
பள்ளிவாசல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில்
பிரதமர் டி.எம் ஜயரத்ன முஸ்லிம் பிரமுகர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில்
ஈடுபட தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடலுக்கான அழைப்பினை முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முஸ்லிம் சமய பெரியார்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் போது தம்புள்ளை பள்ளிவாசலை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இஸ்லாமிய சொந்தங்களின் நன்மைக்காக அரசு எப்போதும் பூரண ஆதரவை வழங்கும் என பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் முடிவில் எட்டப்படும் தீர்மானம் அரசினால் உடனடியாக செயற்படுத்தப்படும் என பிரதமர் அலுவலக அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.