கடந்த
பல ஆண்டுகளாகவே, ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் புள்ளி 5 சதவிகிதம்
தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பெற்றோரும்
குறைந்தது 2 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அரசு
அறிவித்துள்ளது. மேலும் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு,
5 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் ரஷ்ய அரசு அறிமுகப்படுத்தி
உள்ளது.
இருப்பினும்
குழந்தை பிறப்பு விகிதத்தில் போதுமான முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்நிலை
தொடர்ந்தால் தற்போது 143 மில்லியனாக இருக்கும் ரஷ்யாவின் மக்கள் தொகை
2050-ம் ஆண்டில் 111 மில்லியனாக குறைந்து விடும் என ரஷ்ய ஆர்வலர்கள்
தெரிவித்துள்ளனர்.
மேலும்
பணிபுரியும் வயதுள்ளவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து
வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கான
அரசின் உதவிகள் போதுமானதாக இல்லை என்று குற்றம் சாட்டும் பொதுமக்களில்
சிலர், குழந்தை வளர்ப்புக்கு ஆகும் செலவு கூடிக்கொண்டே இருப்பதை ரஷ்ய அரசு
கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர்.